PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

புதுச்சேரியில் சிலிண்டர் பற்றாக்குறை? அரசு என்ன சொல்கிறது?

புதுச்சேரி மாநிலத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதாக சில தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் பரவி வரும் நிலையில், இது குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற பதற்றம் நிலவுவதாக அரசின் கவனத்திற்கு வந்து உள்ளது.

சிலிண்டர்கள் பற்றாக்குறை

இந்த நிலையை தெளிவுபடுத்துவதற்காக புதுச்சேரி அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், புதுச்சேரியில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையல்ல என்றும், பொதுமக்கள் எந்தவித அச்சமும் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்து உள்ளது.

எந்தவித தடையும் இல்லை

இது குறித்து எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுடன் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும், அந்த ஆலோசனையின் போது வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் விநியோகத்தில் எந்தவித தடையும் இல்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *