PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

பொறியியல் பணிகள்: புதுச்சேரி விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

புதுச்சேரி, பிப். —03
திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பொறியியல் பணிகளின் காரணமாக, புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்களின் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி ஆர்.வினோத் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, பிப்ரவரி 5 மற்றும் 7ஆம் தேதிகளில் பிற்பகல் 1.30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் காக்கிநாடா துறைமுக விரைவு ரயில், அதன் பயண வழித்தடத்தில் தேவையான இடத்தில் 90 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும்.

மேலும், பிப்ரவரி 10ஆம் தேதி பிற்பகல் 12.45 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் கச்சிகுடா விரைவு ரயிலும், வழித்தடத்தில் குறிப்பிட்ட இடத்தில் 90 நிமிடங்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *