புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபான கடைகள், சாராயம்- கள்ளுக்கடை போன்றவை, வழக்கமாக முக்கிய நாட்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம், உழைப்பாளர்கள் தினம் அன்று மதுபான கடைகள் மூடப்படும்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம், உழைப்பாளர்கள் தினம் அன்று மதுபான கடைகள் மூடப்படும்
அந்த வகையில், புதுச்சேரியில் வள்ளலார் தினத்தையொட்டி பிப்ரவரி 1 ஆம் தேதி சாராயம், கள்ளுக்கடை, மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி வரும் 11-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்துகள், சாராயம், பார் உட்பட அனைத்து மதுக்கடைகளும் , மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும்.
அன்றைய தினத்தில் அனைத்து கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது கலால் சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார்.














Leave a Reply