PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது

பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடிடின் இஸ்ரேஸ் சுற்றுப் பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் வெளியேற்றியது மற்றும் இடம்பெயர வைத்தது உலகளவில் கண்டனங்களைப் பெற்றது.

காஸாவில் பொதுமக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் இரக்கமின்றி தொடர்ந்து வருகின்றன.

மேலும், இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளன.

மிகவும் கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எதிர்கொண்டு வரும்நிலையிலும், அவரைச் சந்திக்க பிரதமர் மோடி நாளை இஸ்ரேல் செல்கிறார்.

அதுமட்டுமின்றி, இஸ்ரேலில் நீதித்துறையின் சுதந்திரத்தை நெதன்யாகு எவ்வாறு அழித்து வருகிறார் என்பதைக் கண்டித்து இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் மோடியின் உரையை புறக்கணிப்பதாக இஸ்ரேலில் உள்ள எதிர்க்கட்சிகள் அச்சுறுத்துகின்றன.

ஆனால், உண்மை என்னவென்றால், 1988 நவம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த ஆரம்பகால நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் என்பதை மறந்து, பாலஸ்தீனத்தை மோடி அரசு கைவிட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *