PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

தமிழகத்தில் கடும் வெயில் தணியும்: அதிகபட்ச வெப்பநிலை குறைய வாய்ப்பு

தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை (மார்ச் 7) வெளியிட்ட செய்திக் குறிப்பில், மார்ச் 9 முதல் மார்ச் 11 வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கக்கூடும்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மார்ச் 9 முதல் மார்ச் 11 வரை, குறைந்தபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். இந்தக் காலகட்டத்தில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மார்ச் 8 நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மார்ச் 9 மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மார்ச் 10 தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 11 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *