PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு பாதையில் புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைக்கப்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன.

இதனால் தினசரி ரயில் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

தொடக்கத்தில் நாளொன்றுக்கு 204 ரயில்கள் இயக்கப்பட்ட இந்த பாதையில், முதற்கட்டமாக சேவைகள் 164 ஆக குறைக்கப்பட்டன.

தற்போது பணிகள் தீவிரமடைந்துள்ளதால், சேவைகள் மேலும் குறைக்கப்பட்டு வெறும் 115 ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் வழக்கமான சேவையின் பாதியளவு ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *