PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 700 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் மீது அமெரிக்கா புதிய வரி விதித்ததன் தாக்கத்தால், பங்குச்சந்தைகள் இன்று (பிப்.24) கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 83,052.54 புள்ளிகளில் தொடங்கியது.

காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 699.09 புள்ளிகள் குறைந்து 82,595.57 புள்ளிகளில் வர்த்தகமானது.

வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 850 புள்ளிகள் வரை சரிந்தது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 191.75 புள்ளிகள் குறைந்து 25,521.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸில் உள்ள 30 பங்குகளில் இன்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்துள்ளன.

எடர்னல், எச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டிரென்ட், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களும் சரிவில் உள்ளன.

மாறாக, எஸ்பிஐ, பவர் கிரிட் கார்ப்பரேஷன் மற்றும் டாடா ஸ்டீல் பங்குகள் ஓரளவு லாபத்துடன் வர்த்தகமாகின்றன.

பிஎஸ்இ மிட்கேப் 150 குறியீடு 0.8% மற்றும் ஸ்மால்கேப் 250 குறியீடு 1% அளவுக்கு சரிந்துள்ளது.

நிஃப்டி வங்கி, உலோகம், பார்மா, பொதுத்துறை மற்றும் தனியார் வங்கி குறியீடுகள் லாபத்தில் இருந்தாலும், மற்ற துறைகள் பெரும்பாலும் சரிவில் வர்த்தகமாகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *