PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு: அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

தில்லியில் இருந்து லே நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் என்ஜின் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை அவசரமாக தரையிறக்கப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் தில்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து காலை 6.45 மணியளவில் புறப்பட்டது.

விமானத்தில் 150 பயணிகள் இருந்த நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில் இரண்டாவது என்ஜினில் கோளாறு இருப்பதை விமானிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து ‘முழு அவசர தரையிறக்கம்’ செய்ய விமானக் கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரப்பட்டது.

உடனடியாக தில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விமானத்தை தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது.

பின்னர், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் விமானத்தை விமானிகள் பாதுகாப்பாக தரையிறக்கினர்.

விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

என்ஜின் கோளாறு ஏற்பட்ட காரணம் குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *