PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

தவறாக வழிநடத்தியதாக ராகுல் மீது வழக்கு பதிவு – மத்திய அமைச்சர்

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தவறாக வழிநடத்துவதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

தில்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து ராகுலுக்கு முழுமையான தகவல் இல்லை; அவர் நாட்டை தவறாக வழிநடத்துகிறார்” என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டில் அமைதியின்மையை தூண்டும் வகையில் செயல்படுகிறார் என்றும், ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பிடம் சரணடைந்துவிட்டதாக ராகுல் காந்தி தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *