PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

புதுச்சேரி அரசு ஊழியர்களை அரசியல் பிரமுகர்கள் சொந்த பணிக்கு பயன்படுத்த தடை- கவர்னர் அதிரடி நடவடிக்கை

புதுச்சேரியில் புதிதாக பொறுப்பேற்கும் ஆட்சியாளர்கள் அவரவர் விருப்பப்பட்ட அரசு ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் சொந்த பணிக்கு அழைத்துக் கொள்வது வழக்கமானது.

இதனால் அனைத்து துறைகளிலும் மற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணி சுமை ஏற்படுகிறது. இது தொடர்பாக கவர்னர் கைலாஷ்நாதனுக்கு புகார் சென்றது.

இதை தொடர்ந்து இந்த சர்வீஸ் பிளேஸ்மென்டை அதிரடியாக ரத்து செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து நிர்வாக சீர்த்திருத்தத்துறை அனைத்து துறைகளுக்கு அனைத்து துறைகளுக்கு அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய வெளிப் பிராந்தியங்களில் நியமிக்கப்பட்ட அமைச்சகப் பணியாளர்கள், புதுச்சேரி பிராந்தியத்திற்கு சேவை இடமாற்றம் எனும் சர்வீஸ் பிளேஸ்மென்ட் செய்வதை கட்டுப்படுத்த கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *