PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

தனிக்கட்சி தொடங்க திட்டமா? சசிகலா பேட்டி

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் சசிகலா இன்று அஞ்சலி செலுத்தினார். அப்போது அவரது ஆதரவாளர்கள், “துரோகிகளையும் எதிரிகளையும் வீழ்த்தி, சசிகலா தலைமையில் ஆட்சி அமைப்போம்” என்று உறுதிமொழி எடுத்தனர். இது தொடர்பாகவும், வருகிற சட்டமன்றத் தேர்தலை தனிக்கட்சி தொடங்கி சந்திக்கப் போகிறீர்களா? என்பதையும் குறித்து நிருபர்கள் அவரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: “எதிரிகள் யார், துரோகிகள் யார் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். இது பற்றி நான் தனியாக விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. வருகிற சட்டமன்றத் தேர்தலில் என் தலைமையில் நிச்சயம் அம்மா ஆட்சி அமைப்போம். அது எப்படி நடக்கும் என்பதை நீங்கள் விரைவில் தெரிந்து கொள்வீர்கள்,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *