சென்னை எம்கேபி நகர் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவனிடம் ஆசிரியர்கள் சோதனை செய்யும் போது பேண்ட் பாக்கெட்டில் 5 கிராம் கஞ்சா போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பதிவில், அறிவுப்பூர்வமான கல்விக்கு வித்திட 11-ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கையில் அஇஅதிமுக ஆட்சி லேப்டாப்பை கொண்டு சேர்த்தது. ஆனால், இன்றைய திமுக ஆட்சியிலோ, 11-ம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா போதைப்பொருள் தான் சென்றுள்ளது. இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு? என்று குறிப்பிட்டுள்ளார்.
பள்ளி மாணவனிடம் கஞ்சா: எடப்பாடி பழனிசாமி காட்டம்














Leave a Reply