தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர்களிடம் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் யாரும் பேசவில்லையே.. தவெக உடன் யார் பேசினார்கள்? யாராவது பேசி இருக்கிறோமோ? நான் பேசினேனா? அகில இந்திய தலைமை பேசி இருக்கிறதா? ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறோம்.
சோடங்கர் ஏற்கனவே தெரிவித்து உள்ளார். ஒரு போதும் பேசவும் இல்லை. பேசியதும் இல்லை. நாங்கள் திராவிட முன்னேற்ற கழகத்துடன் தான் பேசி இருக்கிறோம் என்று கூறி உள்ளார். திரும்ப திரும்ப அதையே சொன்னால் என்ன பண்ண முடியும்?
அகில இந்திய தலைமை வலிமையான முடிவு எடுக்கும். சரியான முடிவு எடுக்கும். தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ காங்கிரஸ் பேரியக்கத்துக்கு எது நல்லதோ, அந்த முடிவை எடுக்கும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்து உள்ளார்.
அவர் தனது பேட்டியின் மூலம், வரும் தேர்தலில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி திமுகவுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செல்வப்பெருந்தகை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.














Leave a Reply