கோவையில் நடைபெற்ற மேற்கு மண்டல திமுக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி மற்றும் பாஜக குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் அடிமைத்தனமாக செயல்படுகிறார் என்றும், எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்கு கொண்டு செல்கிறார் என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாடு மக்கள் பாஜகவின் கலவர அரசியலை ஏற்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
மேற்கு மண்டலத்தில் திமுகவின் எழுச்சி தெளிவாக தெரிகிறது என்றும், இளைஞரணி அமைப்பு கட்டுக்கோப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்திய அளவில் பாஜகவுக்கு எதிரான ஜனநாயக போராட்டத்தை திமுக தலைமையில் நடத்த வேண்டும் என்ற கருத்து பிற மாநில தலைவர்களிடமும் உருவாகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், 2019 முதல் 2026 வரை அதிமுகவின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்த அவர், 2026 சட்டமன்றத் தேர்தலில் மேற்கு மண்டலத்தின் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு அந்த வெற்றிக்கான முன்னோட்டமாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.














Leave a Reply