PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

விஜய் நிகழ்வை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

வேலூர் மாவட்டம் அகரம்சேரியில், சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பள்ளிக்குப்பம் செல்லும் சாலையில் நாளை காலை 10 மணி முதல் 1 மணி வரை தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 5000 பேர் அமரக்கூடிய வகையில் நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடைபெற்ற கூட்டங்களிலிருந்து மாறுபட்டு, இந்த முறை தொண்டர்கள் வசதியாக அமர நாற்காலிகள் மற்றும் வெயிலிலிருந்து பாதுகாக்க பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டம் தொடங்கும் முன் பங்கேற்பாளர்களுக்கு ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

இதனிடையே, அகரம்சேரியில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்வை முன்னிட்டு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகிலுள்ள டாஸ்மாக் கடையை நாளை மாலை 6 மணி வரை மூட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *