கண்டி: ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026 தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணியை 95 ரன்களுக்கு சுருட்டிய இங்கிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து வீரர் வில் ஜேக்ஸ் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீரர் பிலிப் சால்ட் 40 பந்துகளில் 62 ரன்கள் குவித்து அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார்.
147 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. ஆஸ்திரேலியாவை இதே மைதானத்தில் வீழ்த்தியிருந்தாலும், இந்த முறை பேட்ஸ்மேன்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். தவறான ஷாட்கள் மற்றும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களின் கட்டுப்பாடு காரணமாக இலங்கை 16.4 ஓவர்களில் 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 குரூப்–2 பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதேவேளை, சூப்பர் 8 குரூப்–1 பிரிவில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்து அகமதாபாத் நகரில் ஆட்டம் நடைபெற்று வருகிறது.







Leave a Reply