PONDICHERRY EXPRESS

NO.1 NEWS IN TAMIL WEBSITE

அரையிறுதிக்கான போட்டியில் இந்தியா – பாகிஸ்தான்..! சூடுபிடிக்கும் யு19 உலகக் கோப்பை!

யு19 உலகக் கோப்பை சூப்பர் சிக்ஸின் கடைசி போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருக்கின்றன.

இந்தப் போட்டியில் வெல்லும் அணி அரையிறுதுக்கு செல்லுமென்பதால் கூடுதல் சுவாரசியம் ஏற்பட்டுள்ளது.

யு19 உலகக் கோப்பைப் போட்டிகள் நமீபியா, ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

குரூப் 1-ல் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தேர்வாக, குரூப் 2-ல் இங்கிலாந்து அணி மட்டுமே தேர்வாகியுள்ளன.

மீதமிருக்கும் ஓர் இடத்திற்காக இந்தியாவும் பாகிஸ்தானும் போட்டியிடுகின்றன.

புள்ளிப் பட்டியலில் 6 (+3.337) புள்ளிகளுடன் இந்திய அணி சற்று அதிகமான வாய்ப்புகளைப் பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணியோ 4 ( +1.484) புள்ளிகளுடன் இருப்பதால், இந்தியாவுக்கு எதிராக அதிக ரன் ரேட்டில் வெற்றிப்பெற கட்டாயத்தில் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *